ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மசாலா காளான் பிரியாணி!

காளான் சைவப் பிரியர்களின் மிக விருப்பமான உணவு வகைகளில் ஒன்று. அதிகப்படியான புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த இந்த காளான் வைத்து பல வகையான உணவு முறைகள் செய்து வந்தாலும் பிரியாணிக்கு தனி மதிப்பு தான். அசைவ பிரியாணியை தோற்கடிக்கும் வகையில் நேர்த்தியான சுவையில் இந்த காளான் பிரியாணி அமைந்திருக்கும். ரெஸ்டாரண்ட் டெஸ்டில் மசாலா காளான் பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

காளான் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கப் காளான் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய காளானை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு கப் நன்கு எண்ணெயில் வறுத்த பெரிய வெங்காயம் சேர்த்து கலக்க வேண்டும். இதற்கு எண்ணெயில் நன்கு பொன்னிறமாக பொரிந்த பெரிய வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.
இறுதியாக இந்த கலவையுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு கலந்து குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

அதேபோல் பிரியாணி அரிசியையும் நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி நெய் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை ஒன்று, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, கடல்பாசி ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…

இதில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கி குழைவாக வந்ததும் நாம் கலந்து வைத்திருக்கும் காளான் கலவையை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.

இந்த கலவையை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கலந்து கொடுக்க வேண்டும். அதன் பின் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக நாம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு ஒரு சேர கலந்து கொடுக்க வேண்டும்.

குறிப்பாக அரிசிகள் உடையாதவாறு மெதுவாக கலந்து கொடுக்க வேண்டும். அதன் பின் குக்கரை அனைத்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரின் அழுத்தம் குறைந்ததும் பிரியாணி இன்மேல் ஒரு தேக்கரண்டி நெய் பொடியாக நறுக்கிய மல்லி புதினா இலைகள் தூவி கிளறினால் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மசாலா காளான் பிரியாணி தயார்.

Exit mobile version