முருங்கைக்கீரை பணியாரம், தல தல சிவப்பு நிறத்தின் காரச்சட்னி! ரெசிபி இதோ…

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரை வைத்து பலவிதமான அசத்தும் ரெசிபிகள் நாம் இதுவரை பார்த்திருந்தாலும் எதிர்பார்க்காத விதமாக சற்று புதுமையான ரெசிபியை இந்த முறை பார்க்க உள்ளோம். இந்த வகையில் முருங்கைக்கீரை வைத்து பஞ்சு போல மிருதுவான பணியாரம் மற்றும் தல தல சிவப்பு நிறத்தில் கார சட்னி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்த்துவிடலாம். ஒரு அகலமான கடாயில் 5 பல் வெள்ளை, , காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் பத்து, நன்கு பழுத்த நான்கு தக்காளி, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி பாதியாக வதங்கிய பிறகு அரை தேக்கரண்டி கல் உப்பு, ஒரு தேக்கரண்டி வெள்ளை எள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் கைப்பிடி அளவு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக்கீரை சேர்த்த பிறகு குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆரம்பித்து அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் கலக்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பணியாரத்திற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து லேசாக வருத்த பிறகு கைப்பிடி அளவு சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வதக்கிய முருங்கைக்கீரை இலைகளையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக வாசனைக்கு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து கலந்து இறக்கிக் கொள்ளலாம்.

இனி பட்டர் நாண் சாப்பிட ரெஸ்டாரன்ட் செல்ல வேண்டாம்… ஈஸ்ட் எதுவும் சேர்க்காமல் வீட்டிலேயே எளிமையான நாண் செய்வதற்கான ரெசிபி இதோ!

இப்பொழுது ஒரு கப் தோசை மாவில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தாளிப்பு, அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பணியாரத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மாவு பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் பணியாரம் செய்வதற்கு தயாராக உள்ளது.

இந்த நேரத்தில் ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் பாதி அளவு நம் தயார் செய்து வைத்திருக்கும் பணியார மாவு அதன் நடுவே சிவப்பு நிற காரச் சட்னி, அதன் மேல் பக்கம் மீண்டும் பணியார மாவு என ஒன்றன் மேல் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை பணியாரம் தயார். இந்த பணியாரத்திற்கு காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

Exit mobile version