தோசை தான் வேண்டும்… ஆனால் ஹெல்தியான தோசையாக இருக்க வேண்டும்! ரெசிபி இதோ..

வீட்டில் பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் தோசை மற்றும் இட்லி செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தோசை மாவு இல்லாத சமயங்களில் ரவை வைத்து உப்புமா, சேமியா, சப்பாத்தி, பொங்கல் என மற்ற வகையான உணவுகள் செய்வதும் உண்டு. ஆனால் தோசை பிரியர்களுக்கு எப்போதும் தோசை தான் வேண்டும். இந்த மாதிரி சமயங்களில் சம்பா ரவை வைத்து அருமையான மற்றும் ஹெல்த்தியான சுவை மிகுந்த தோசை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு கப் சம்பா ரவையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கழுவி சுத்தம் செய்து கண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது கோதுமை ரவை நன்கு ஊறி இருக்கும். இதனுடன் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், ஐந்து வத்தல், ஒரு சிறிய துண்டி இஞ்சி, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கலந்து நன்கு மையாக அரைத்து எடுக்க வேண்டும்.

அரைத்த மாவுடன் அரை தேக்கரண்டி உப்பு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்த மாவை ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். இந்த நேரத்தில் தோசைக்கு ஏற்ற மல்லி பூ சட்னி தயார் செய்து கொள்ளலாம்

அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், ஐந்து சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி பொரிகடலை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு சிறிய கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறினால் சுவையான மல்லி பூ சட்னி தயார்.

நல்ல பெரிய இறால் கிடைக்கும் பொழுது தொக்கு செய்யாமல் ஒரு முறை உதிரி உதிரியான பிரியாணி செய்வதற்கான ரெசிபி இதோ!

தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடு படுத்தி கொள்ள வேண்டும். அதன் பிறகு மிதமான தீயில் வைத்து தோசை மாவை சேர்த்து மெத்து மெத்து என ஊற்றிக் கொள்ள வேண்டும். தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து உண்ணும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான சம்பா ரவை தோசை தயார்.

Exit mobile version