ரசம் சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் முட்டை தவா மசாலா!

ரசம் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் பொருந்தும் விதமாக முட்டை வைத்து காரசாரமாக ரெசிபி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும். வாங்க இந்த முறை முட்டை வைத்து தவா மசாலா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நமக்கு தேவையான முட்டைகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முட்டைகளை தோல் நீக்கி சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை அதன்மேல் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொள்ள வேண்டும்.

இதில் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை திரட்டி எண்ணெயோடு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

மீண்டும் அதே தவாயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, இரண்டு பச்சை மிளகாய், இரண்டு தக்காளி சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பட்டி வைத்து தித்திப்பான இனிப்பு பணியாரம் ! எச்சில் ஊறும் ரெசிபி இதோ…

இதற்காக இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலா பொருட்களை வதக்கும்பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலவை நன்கு கலந்து கொடுத்து பச்சை வாசனை வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

இந்த நேரத்தில் நான் மசாலா தடவி பொறித்து எடுத்த முட்டைகளை கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினான் சுவையான தவா முட்டை மசாலா தயார். இந்த மசாலா சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.

Exit mobile version