குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இந்த முட்டை குழம்பு சூடான சாதம் மட்டுமின்றி இட்லி , தோசை, சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக அமைந்திருக்கும். இந்த முட்டை குழம்பு குக்கரின் பத்தே நிமிடங்களில் மிக எளிமையான முறையில் சமைத்து விடுவதற்கான அசத்தலான ரெசிபி இதோ….
ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு பட்டை இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள் , ஒரு தேக்கரண்டி சிக்கன் மசாலா, ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா, அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் இரண்டு உருளைக்கிழங்குகளை கழிவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சை சுண்டைக்காய் வைத்து அருமையான காரக்குழம்பு!
உருளைக்கிழங்குகளின் மீது மசாலாக்கள் நன்கு சேரும் வரை ஒரு சேர கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது குக்கரில் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து மூன்று விசில்கள் வரும் வரை மூடி போட்டு வேகவைத்து கொள்ளலாம். எந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் நமக்கு தேவையான ஐந்து முதல் ஏழு முட்டைகளை நீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
முட்டை நீரில் வேகும் பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து வேகவைத்தால் முட்டையின் தோல் நீக்க எளிமையாக இருக்கும். முட்டை குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கும் தண்ணீரில் வேக வேண்டும்.
இப்படி நன்கு வந்த முட்டையை தனியாக எடுத்து ஆற வைத்து விடவும். குக்கரில் விசில் வந்ததும் நாம் வேக வைத்திருக்கும் முட்டையை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்.