இந்த காய் வைத்து ஊறுகாயா? சீப்பாக கிடைக்கும் முருங்கைக்காய் வைத்து ஊறுகாய் ரெசிபி!

பருவ காலங்களில் முருங்கக்காய் மரம் நிறைய காய்த்து கிடந்தாலும் குழம்பு, காய் என சமைப்பதற்கு சில காய்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை எவ்வளவு முருங்கைக்காய் இருந்தாலும் வீணாக்காமல் பதப்படுத்தும் அளவிற்கு அருமையான ரெசிபி இதோ உள்ளது. வாங்க முருங்கைக்காய் வைத்து பல மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஊறுகாய் ரெசிபி இதோ..

முதலில் இரண்டு முருங்கை காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து நடுத்தர அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெள்ளைத் துணியில் சேர்த்து ஈரங்களை துடைத்து தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கை காய்களை அதில் சேர்த்து மிதமான தீயில் இரண்டு முதல் ஐந்து நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பெரிய எலுமிச்சை பழ அளவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் முருங்கைக்காய் நன்கு வதங்கி நிறம் சற்று மாறி ஒரு பக்கமாக வெடிக்கத் தொடங்கி இருக்கும். அப்போது அதை தனியாக மற்றொரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து நன்கு வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளலாம்.

மீண்டும் அதே கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கருவேப்பிலை சிறிதளவு, மூன்று காய்ந்த வத்தல், பத்து பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். கருவேப்பிலை நன்கு பொரிந்து வரும் நேரத்தில் ஊற வைக்க புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம். அடைப்பை அதிகமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

புளி கரைசல் 2 நிமிடம் கொதித்த பிறகு நம் எண்ணையில் பொறித்து வைத்திருக்கும் முருங்கை காய்களை சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக்காய் சேர்த்து பிறகு புளி தண்ணியுடன் ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

சிக்கன், மஸ்ரூம், பன்னீர், உருளைக்கிழங்கு, சோயா, முட்டை என எது கிடைத்தாலும் ஒரே ரெசிபி தான்!

புளி கரைசல் நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் ஒன்றரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாகத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கடுகு பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

குறைந்தது ஐந்து நிமிடம் கடாயின் உரங்களின் எண்ணை பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும் இப்பொழுது சுவையான முருங்கக்காய் ஊறுகாய் தயார்.

Exit mobile version