எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்யாமல் ஒரு முறை தேங்காய் முட்டை சாதம் செய்து பாருங்கள்…

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக வித விதமான சாதம் செய்யும் பொழுது வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக முட்டை சாதம் அதில் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்யாமல் சற்று வித்தியாசமாக தேங்காய் சேர்த்து செய்யும் பொழுது சுவை கூடுதல் ஆகவும் குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்திலும் அமைந்திருக்கும். வாங்க இந்த முறை சற்று வித்தியாசமாக தேங்காய் சேர்த்து முட்டை சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முட்டை சாதம் செய்வதற்கு முதலில் சாதம் தயார் செய்து நன்கு ஆர வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கின் இரண்டு வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு அகலமான கடாயின் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு குழிக்கரண்டி அளவிற்கு தேங்காய், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், முக்கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கடாயின் தேங்காய் ஒட்டாத அளவிற்கு கலந்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் சாம்பாரா… என கேள்வி கேட்பதற்கு ஒருமுறை தக்காளி மசாலா அரைத்து சாம்பார் ரெசிபி இதோ!

இப்பொழுது இந்த முட்டை கலவையை கடாயில் சேர்த்து நன்கு பொடிமாஸ் போல கலந்து கொடுத்து கொள்ள வேண்டும். தேங்காய் மற்றும் வெங்காயத்துடன் முட்டை சேர்ந்து நன்கு வெந்து வர வேண்டும். இந்த நேரத்தில் நமக்கு தேவையான அளவு சாதத்தை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை சாதம் தயார்.

Exit mobile version