எவ்வளவோ பாயாசம் சாப்பிட்டு இருப்போம்… ஆனால் தேங்காய் பூ பாயாசம்! கேட்கும்போது சாப்பிட ஆசை வருதா.. ரெசிபி இதோ!

வீடுகளில் விசேஷ நாட்களாக இருந்தாலும் சரி, கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக இருந்தாலும் சரி, சாதாரண மகிழ்ச்சி தரும் நாட்களாக இருந்தாலும் சரி இனிப்பிற்கு பஞ்சமே இருக்காது. அதுவும் மதியான விருந்து உடன் பாயாசம் மிகவும் சிறப்பாக அமையும். இதுவரை நாம் ஜவ்வரிசி வைத்து, சேமியா வைத்து, ரவை வைத்து பால் சேர்த்து என பலவிதமான பாயாசங்களை செய்து சாப்பிட்டு உள்ளோம். இந்த முறை சற்று வித்தியாசமாக தேங்காய் பூ வைத்து தித்திப்பான பாயாசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

இந்த முறை ஒரு முழு தேங்காய்வில் உள்ள தேங்காய் பூவை பயன்படுத்தி பாயாசம் செய்ய போகிறோம். இதற்காக தேங்காய் உடைத்து அதன் பூவே தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் பூவை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் தேங்காய் பூவிற்கு இணையாக ஒரு கப் வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப்பூ நன்கு பொன்னிறமாக வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் வெல்லம் கரைசலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பணியாரத்திற்கு மட்டுமில்லாமல் ஆப்பம், இடியாப்பத்திற்கும் சிறப்பாக பொருந்தும் காய்கறிகள் இல்லாத பச்சை சால்னா!

வெல்லத்தோடு தேங்காய் பூ இணைந்து நன்கு ஒரு சேர சுண்டி வர வேண்டும். வெல்லம் நன்கு கெட்டியாகி வரும் நேரத்தில் இரண்டு கப் தேங்காய் பால் சேர்த்து கிளற வேண்டும். தேங்காய்ப்பால் நன்கு கலந்து கெட்டியாக வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை பழம் சேர்த்து மீண்டும் ஒரு கப் பால் சேர்த்து கிளறி விளக்கினால் சுவையான தேங்காய் பூ பாயாசம் தயார். எப்போதும் ஒரே விதமான பாயாசத்தை மீண்டும் மீண்டும் செய்யாமல் இதுபோன்ற வித்தியாசமான பாயாசங்கள் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.

Exit mobile version