வீட்டில் இட்லி மற்றும் தோசை சாப்பிடும் பொழுது சற்று அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதற்கு பரிமாறப்படும் சட்னியை வைத்து தான் உள்ளது. சட்னி சற்று வித்தியாசமாக சுவையில் காரசாரமாக இருக்கும் பொழுது கூடுதலாக இரண்டு இட்லி மற்றும் தோசை சாப்பிட விருப்பம் வரும். எப்போதும் ஒரே மாதிரியாக சட்னி செய்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க வித்தியாசமாக மற்றும் சுவையான சட்னி ரெசிபிகள் இதோ.
கர்நாடகா ஸ்டைல் தும்கூர் சட்னி
கர்நாடகாவில் பலவிதமான சட்னி ரெசிபிகள் இருந்தாலும் இந்த சட்னிக்கு தனி சிறப்பு தான். முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக கடாயில் மீதம் இருக்கும் அதை எண்ணையில் 5 பல் வெள்ளை பூண்டு, , சிறிய துண்டி இஞ்சி, 5 சின்ன வெங்காயம் சேர்த்து முதலில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு கரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் மூன்று, பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய் சேர்த்த பிறகு கைப்பிடி அளவு புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இலைகள் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது கடாயில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் நன்கு ஆரியதும் இதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் நாம் முதலில் வருத்த உளுந்தம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சட்னிக்கு சிறிய தாளிப்பு ஒன்று தயார் செய்து கொள்ளலாம். சுவையான கர்நாடகா ஸ்பெஷல் தும்கூர் சட்னி தயார்.
காரல் மற்றும் கசப்பு சுவை தெரியாத கற்பூரவள்ளி துவையல்
சளி, தடுமல் உடல் வலி, கோளாறு போன்ற நேரங்களில் கற்பூரவள்ளி நல்ல மருந்தாக இருக்கும். இந்த முறை அந்த கற்பூரவள்ளி இலை வைத்து துவையல் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
முதலில் ஒரு கடாயில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கப் உளுத்தம் பருப்பு, மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உளுந்து நன்கு எண்ணெயோடு வறுப்பட்டு நிறம் மாறும் சமயத்தில் பத்து முதல் 15 சின்ன வெங்காயம், 4 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஏழு முதல் 10 கற்பூரவள்ளி இலை, கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். கற்பூரவள்ளி இலை மற்றும் கொத்தமல்லி இலை நன்கு எண்ணெயோடு வதங்கி சுருங்கி வரவேண்டும்.
அசைவ டிக்காவின் சுவையை தோற்கடிக்கும் விதத்தில் சைவ ரெசிபி! பாகிஸ்தானி மஸ்ரூம் டிக்கா!
அடுத்ததாக கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளி, தேவையான அளவு கல்லுப்பு கலந்து வதக்கிய பொருட்களை ஆரம்பித்து கொள்ளலாம்.
இப்போது நாம் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்தால் சுவையான கற்பூரவள்ளி துவையல் தயார். சூடான சாதத்தில் இந்த துவையல் சேர்த்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற சுவையில் செய்து சாப்பிடும் பொழுது சளி தொல்லையிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்.