புரோட்டின் சட்னி செய்ய ஆசையா? வாங்க இந்த ரெசிபி உங்களுக்கு தான்!

தினமும் நம் வீடுகளில் காலை மாலை உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், ஆப்பம், அடை தோசை, ரவை என அனைத்திற்கும் சட்னி செய்வது அவசியமான ஒன்று. . ஆனால் இந்த சட்னி எவ்வளவு சத்து நிறைந்ததாக இருப்பது என்பதை பலர் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. இந்த முறை நாம் சாப்பிடும் சட்னி சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என விரும்பும் இல்லத்தரசிகளுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க புரோட்டின் சத்து நிறைந்த வேர்க்கடலை வைத்து அருமையான சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு கப் வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பருப்பின் நிறம் மாறத் துவங்கியதும் சாரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஏழு காய்ந்த வத்தல், வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெள்ளை பூண்டு வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக நன்கு பழுத்த மூன்று தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி பழம் சேர்த்த பிறகு அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளிப்பழம் நன்கு மசிந்து வரும் நேரத்தில் கைப்பிடி அளவு மல்லி இலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு முறை கிளறி கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

சத்துகளுக்கு பஞ்சமே இல்லாமல் மொறு மொறு வடை ரெசிபி! ஒருமுறை ட்ரை பண்ணலாம் வாங்க…

இப்பொழுது நாம் வதக்கி அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைத்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து தாளித்து கலந்து கொள்ளலாம்.

ஒன்று, இரண்டு என தோசை சாப்பிடுபவர்கள் கூட இந்த சட்னி வைத்து சாப்பிட்ட பிறகு குறைந்தது 5, 8 என சாப்பிட ஆசைப்படுவார்கள். மேலும் இந்த சட்னி முழுக்க முழுக்க சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

Exit mobile version