சப்பாத்தி சாப்பிட்டும் உடம்பு குறையவில்லையா? இந்த கறி வைத்து சாப்பிடுங்கள் உடம்பு குறைவது நிச்சயம்…

உடல் குறைய வேண்டும் என்ற கவனத்தில் பலர் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சப்பாத்தி போன்ற கார்போஹைட் சற்று குறைவாக உள்ள உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த சப்பாத்தி சாப்பிடும் பொழுது இதனுடன் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடும் பொருட்களின் காரணமாகவே சிலருக்கு சப்பாத்தி சாப்பிட்டாலும் உடம்பு குறைவது இல்லை. பெரும்பாலானோர் சப்பாத்திக்கு காய்கறிகள் அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும் என நினைத்து குருமா செய்து சாப்பிடுகின்றனர். இதில் காய்கறிகள் அதிகம் இருந்தாலும் தேங்காய் முந்திரி பருப்பு போன்ற காரணிகளின் காரணமாக உடல் எடை மீண்டும் அதிகரிக்க கூடும். இதை தவிர்த்து சப்பாத்திக்கு கெட்டியான தால் வைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பாக உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது..

முதலில் மிருதுவான சப்பாத்தி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு சப்பாத்தி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாவிற்கு ஏற்ற அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி சப்பாத்தி மாவை முதலில் தண்ணீர் தெளித்து செய்ய வேண்டும். முழுவதுமாக பிசையாமல் பாதியாக அதாவது ஒன்று இரண்டாக கலந்து பிசைந்து ஐந்து நிமிடம் மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டு எடுத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

இப்பொழுது கட்டி பருப்பு செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம். ஒரு குக்கரின் ஒரு கப் துவரம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு சேர்த்து முதலில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் மூன்று விஷயங்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெள்ளைப்பூண்டு, பொடியாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பூண்டு மற்றும் இஞ்சி நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், சரியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி /மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்று உடன் நன்கு பொடியாக நறுக்கிய அல்லது பிசைந்த ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து குழைவாக வரும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி கொள்ளலாம்.

ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அதிரடியான சுவையில் மட்டன் உருண்டை! ரெசிபி இதோ..

இறுதியாக நாம் வேக வைத்திருக்கும் பருப்பை ஒருமுறை நன்கு கடைந்து மாவாக மாற்றிய பிறகு கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பருப்பு வேக வைத்த தண்ணீரும் இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இரண்டு முதல் மூன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் சுவையான மற்றும் சத்து நிறைந்த சப்பாத்தி டால் கறி தயார்.

Exit mobile version