கிறிஸ்மஸ்க்கு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி கலகலா செய்து அனைவரையும் அசத்துங்கள்…!

கலகலா சூப்பரான எளிமையான ஸ்னாக்ஸ் ரெசிபி ஆகும். சமையல் புதிதாக பழகுபவர்கள் கூட இந்த கழகலாவை எளிமையாக செய்ய முடியும். கிறிஸ்மஸ் என்றால் கேக், டெசர்ட், இனிப்பு வகைகள் கட்டாயம் இடம் பெறும். இது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபியாக கருதப்படுகிறது. இந்த கலகலா செய்வதற்கு மிகக் குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். சுவையான இந்த கலகலா ஸ்நாக் ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த கிறிஸ்துமஸ்க்கு பஞ்சு போல மென்மையான பிளம் கேக் இப்படி செய்து பாருங்கள்…!

கலகலா செய்வதற்கு ஒரு பவுலில் ஒன்றரை கப் அளவிற்கு மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கால் ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் பவுடரை சேர்க்கவும். பிறகு கால் கப் அளவு வெள்ளை சர்க்கரையை பொடியாக அரைத்து அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு இல்லாத வெண்ணெய் ஒன்றரை மேசை கரண்டி சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கால் கப் அளவிற்கு தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இதனை மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். பாலை மொத்தமாக ஊற்றக்கூடாது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்தால் தான் மாவு சரியான பதத்திற்கு வரும்.

பண்டிகை நாட்களில் சுவையாக வித்தியாசமாக கேரட் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரே அளவில் சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் சம அளவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது இதனை தட்டையாக தட்டி உங்களுக்கு விருப்பமான வடிவத்திற்கு மடித்து வைக்கவும். ஃபோர்க் இருந்தால் அதில் வெண்ணை தடவி தட்டிய மாவினை அதன்மேல் வைத்து சுருட்டி வைத்தால் அருமையான வடிவம் கிடைக்கும். இப்பொழுது கடாயில் இதனை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் நாம் உருட்டி வைத்திருக்கும் மாவை சேர்த்து பொரித்து எடுக்கலாம். நல்ல பொன்னிறமாகும் வரை பொரியவிட்டு எடுத்தால் அருமையான கலகலா தயார்!

Exit mobile version