காலிபிளவர் பார்த்த உடனேயே பலரின் நினைவில் முதலில் வருவது காலிஃப்ளவர் 65 தான். இந்த காலிபிளவர் 65 செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும். ஆனால் அதிகப்படியான எண்ணெய் இருப்பதன் காரணமாக சிலர் இதை விரும்புவதில்லை. அதற்கு பதிலாக காலிஃப்ளவர் வைத்து அருமையான வெஜ் புலாவ் செய்து கொடுத்து பாருங்கள். அசத்தும் இந்த சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுவார்கள். ஆந்திரா ஸ்டைல் காலிஃப்ளவர் வெஜ் புலாவ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த புலாவ் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு அண்ணாச்சி பூ, இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி கசகசா, ஒரு தேக்கரண்டி மல்லி, கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து சற்று அரைக்க வேண்டும்.
அதன் பின் அதே மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த மூன்று தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு குக்கரில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அதனுடன் இரண்டு பிரியாணி இலை, ஐந்து முதல் ஏழு முந்திரிப் பருப்பு, மூன்று பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மூன்று சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விளக்குவின் பச்சை வாசனை சென்றவுடன் விழாவிற்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் இவற்றை நீளவாக்கில் நறுக்கி குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் காய்கறிகளை சேர்த்து வதக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். உப்பு சேர்க்க ஒரு நிமிடத்திற்கு தட்டு போட்டு காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அதன் பின் குக்கரில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
வாசனை மணக்க மணக்க ஐந்தே நிமிடத்தில் காரசாரமான பச்சை பட்டாணி குருமா!
மசாலா விழுது பச்சை வாசனை செல்லும் வரை இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்க வேண்டும். அதன் பின் அரைமணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பார்ப்பது அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குக்கரை மூடி மூன்று விசயங்கள் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான காலிபிளவர் புலாவ் தயார். இப்பொழுதும் காலிபிளவர் வைத்து ஒரே மாதிரியாக 65 செய்யாமல் இது போன்ற வித்தியாசமான முறையில் புலாவ் செய்து கொடுத்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்தலாம்.