லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக 10 நிமிடத்தில் தயாராகும் காலிபிளவர் ரைஸ்! ரெசிபி இதோ…

லஞ்ச் பாக்ஸ் கொண்டு செல்லும் குழந்தைகளுக்கு சாதம் தனியாக குழம்பு , காய் என விதவிதமாக சமைக்க நேரம் இல்லாத பொழுது ஒரே சாதமாக செய்து எளிமையான முறையில் சமையலை முடித்து விடலாம். இந்த முறை காய்கறி சேர்த்து சற்று வித்தியாசமாக காலிஃப்ளவர் வைத்து அருமையான ரைஸ் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் காலிஃப்ளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இந்த ரைஸ் செய்வதற்கு தேவையான மசாலா தயார் செய்து கொள்ளலாம்.

அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், மூன்று பல் வெள்ளை பூண்டு, , ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு பட்டை, இரண்டு லவங்கம் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, ஐந்து பல் வெள்ளை பூண்டு, , ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதில் வெள்ளைப் பூண்டுவை தட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 3 காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வருத்த பொருட்கள் நன்கு சூடு ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நம் தயார் செய்து வைத்திருக்கும் பொடி சேர்த்து கிளறி கொள்ளலாம்.

மட்டன் வாங்கினால் ஒருமுறை இதுபோல வாணியம்பாடி மட்டன் பிரியாணி செய்து பாருங்கள்!

இதனுடன் நாம் வேக வைத்திருக்கும் காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலிபிளவர் சேர்த்த பிறகு மசாலாவுடன் ஒரு சேர்ந்து வரும் வரை ஒரு நிமிடம் நன்கு மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு அதன் நடுவே இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முட்டை கிளரும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டை பொடிமாஸ் தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் சுவையான காலிபிளவர் ரைஸ் தயார். இதில் காலிபிளவர் முட்டை என குழந்தைகளுக்கு பிடித்த பொருட்கள் கலந்திருப்பதால் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

Exit mobile version