பாய் வீட்டு கல்யாணம் என்றாலே இனிப்பு வகைகளுக்கு தனி சிறப்பு தான். அதிலும் கேரட் பிர்னி சாப்பிடுவதற்கு தரமான சுவையில் அம்சமாக இருக்கும். அந்த கேரட் பிர்னியை நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி….
முதலில் ஒரு கால் கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ள வேண்டும். அதை போல் கால் கப் ஜவ்வரிசியையும் ஊறவைத்து கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, 10 காய்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு முழு கேரட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துருவலை நெய்யுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கேரட் நன்கு வதங்கியதும் ஒரு லிட்டர் பாலை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டையும் பாலையும் நன்கு கலந்து கொடுத்து ஒரு சேர கொதிக்க விட வேண்டும்.
விசேஷ நாட்களில் மேலும் சிறப்பாக வீட்டிலே செய்யப்படும் கதம்ப சாதம்!
இந்த நேரத்தில் நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியையும் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் நாம் கொதிக்கும் பாலினுள் சேர்க்க வேண்டும்.
மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும். அப்போதுதான் அரைத்த பாசுமதி அரிசி பாலுடன் சேர்ந்து நன்கு வெந்து வரும். 10 நிமிடம் தொடர்ந்து கிளரும் பொழுது அரிசி நன்கு வந்து விடும். அதன் பின் ஒரு கப் சர்க்கரையை கடாயில் சேர்த்து மீண்டும் கிளர வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கொதி வர வேண்டும். அதன் பின் சூப்பரான கேரட் பிர்னி தயார்