பஞ்சு போல மிருதுவான மற்றும் சத்து நிறைந்த கேரட் கேக் செய்வதற்கான ரெசிபி!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக்கை பேக்கரிகளில் அடிக்கடி வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுத்து மகிழ்விக்கும் பொழுது குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்படி அடிக்கடி சாப்பிடும் கேக் சத்து நிறைந்ததாக மாற வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் கேரட் வைத்து அருமையான பஞ்சு போன்ற சுவை மிகுந்த கேக் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த கேரட் கேக் செய்வதற்கு டெல்லி கேரட் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த கேரட் கிடைக்காத பட்சத்தில் நமக்கு கிடைக்கும் ஊட்டி கேரட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று நடுத்தர அளவுள்ள கேரட்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான தட்டில் மூன்று கேரட்டையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் காட்சிய பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர், 75 மில்லி லிட்டர் சன் பிளவர் ஆயில், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு கப் நாட்டு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த பாத்திரத்தில் ஒன்றரை கப் கோதுமை மாவு, இரண்டு சிட்டிகை உப்பு இவற்றை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, அரை தேக்கரண்டி சுக்குத்தூள், ஒரு தேக்கரண்டி பட்டை தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவை கட்டிகள் விழாக வண்ணம் ஒருசேர கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் கூடுதலாக நம் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ் வகைகள், உலர் திராட்சைகள், துருவிய மூன்று கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இறுதியாக நல்ல வாசனைக்காக துருவிய ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பல தோல் இரண்டு தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த கேக் செய்வதற்கு மாவு தயார் செய்து கொண்டிருக்கும் பொழுது ஓவனை ஒரு குறைந்தது பத்து நிமிடம் மிதமான சூட்டில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஐந்தே நிமிடத்தில் தயாராகும் ஒன் பாட் பாஸ்தா ரெசிபி இதோ!

நாம் கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாவை மாற்றும் முன்பாக அந்த பாத்திரத்தில் பட்டர் சீட் அல்லது எண்ணெய் தடவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதன் உள் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மேல் பக்கம் கூடுதலாக அலங்காரத்திற்கு ஏற்ப நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான கேரட் கேக் தயார்.

Exit mobile version