ஒரு கப் பச்சரிசி போதும்…. மிருதுவான கேக் வீட்டிலேயே செய்யலாம்! ரெசிபி இதோ….

பொதுவாக கேக் செய்வதற்கு மைதா அல்லது கோதுமை மாவு அதிகபடியாக பயன்படுத்துவார்கள். சற்று வித்தியாசமாக பச்சரிசி வைத்து வீட்டிலேயே எளிமையான முறையில் கேக் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பச்சரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இந்த பச்சரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், 4 ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான கடாயில் ஒன்றரை கப் அளவிற்கு வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இந்த அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மையாக அரைத்த அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால், வெல்லபாகு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் இறுதியாக அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கடினமான சமையலை எளிமையாகவும், சுவையானதாகவும் மற்றும் சத்து நிறைந்ததாகவும் மாற்றும் சமையலறை டிப்ஸ்….

இப்பொழுது ஒரு குக்கரில் உள்பக்கமாக நெய் தடவிக் கொள்ளவும். அடுத்ததாக நாம் கலந்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
குக்கரின் அழுத்தம் குறைந்ததும் ஒரு கத்தியை வைத்து அதன் நடுப்பகுதி குத்தி பார்க்கும் பொழுது மாவு ஒட்டாமல் வந்தால் இப்பொழுது கேக் தயாராக மாறிவிட்டது.

Exit mobile version