பத்து நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் விதவிதமான லன்ச் பாக்ஸ் கொடுத்து விடுவது மட்டுமல்லாமல் கொடுத்துவிடும் லஞ்ச் பாக்ஸ் காலியாகவும் வர வேண்டும், சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். தினமும் புதுவிதமான ரெசிபிகள் ட்ரை பண்ணி குழந்தைகளை மகிழ்விக்கும் பெற்றோர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் அதிகமாக சாப்பிடாத குடைமிளகாய் வைத்து அருமையான சாதம் ஒன்று செய்யலாம். பத்து நிமிடத்தில் இந்த சாதத்தை செய்து முடிப்பதால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இருக்கு எளிமையாக கொடுத்து விட முடியும். குடைமிளகாய் சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

இந்த சாதம் செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தனியா, வத்தல் 2, 4 தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேர்கடலை சற்று நிறம் மாறியதும் இதில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து வறுக்க வேண்டும். எள் நன்கு பொரிந்து படபட எனத் தெறிக்கும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது நாம் வறுத்த பொருட்களை சிறிது நேரம் சூடு தணிய வைத்து விட வேண்டும்.அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். மிதமான தீயில் நான்கு முதல் ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். அப்பொழுதுதான் குடைமிளகாய் எண்ணெயோடு சேர்ந்து நன்கு வதங்கி வரும்.

அதிகமாக மசாலா ஏதும் சேர்க்காமல் சுவையான எளிமையான கொங்கு நாட்டு வெள்ளை பிரியாணி! ரெசிபி இதோ…

குடைமிளகாய் நன்கு வதங்கியதும் நாம் வடித்து ஆற வைத்திருக்கும் ஒரு கப் சாதத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். சாதம் சேர்த்த பிறகு ஒரு முறை கிளறி கொடுத்தால் போதும். இந்த நேரத்தில் நாம் வறுத்தரைத்த மசாலாவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

மசாலா சேர்த்த பிறகு மேலும் ஒரு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து சாதத்துடன் நன்கு ஒரு சேர கிளற வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கிக் கொள்ளலாம்.

சாதத்தை இறக்கிய பிறகு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறி வைத்தால் சுவையான குடைமிளகாய் சாதம் தயார். இந்த சாதத்திற்கு முட்டை வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செய்து எளிமையான முறையில் கொடுத்து விடலாம். சத்து நிறைந்த குடைமிளகாய் பிடிக்காத குழந்தைகளுக்கு இது போன்ற சுவையான சாதம் செய்து கொடுக்கும் பொழுது மசாலாவின் சுவையில் திருப்தியாக சாப்பிட்டு விடுவார்கள்.

Exit mobile version