பாகற்காய் பிடிக்காதவர்களை கூட விரும்பி சாப்பிட வைக்கும் பாகற்காய் குழம்பு!

பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. ஆனால் பாகற்காயின் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் ஒளிந்து இருக்கிறது. இந்த பாகற்காயின் கசப்பு சுவையின் காரணமாக பலரும் இந்த காயை ஒதுக்கி வைத்து விடுவர். குறிப்பாக குழந்தைகள் பாகற்காயை அறவே தொட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை பாகற்காயை இப்படி குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள். பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

கமகமக்கும் சத்தான கொண்டை கடலை குழம்பு இப்படி மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க…!

பாகற்காய் குழம்பு செய்வதற்கு 1/4 கிலோ அளவு பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வடிவத்தில் நறுக்க வேண்டும். பாகற்காயை நறுக்கிய பிறகு சிறிது நேரம் உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும். உப்பு தண்ணீரில் போட்டு வைப்பதால் கசப்புத்தன்மை குறைந்து விடும். அதன் பிறகு இதனை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 10 பல் பூண்டு, 100 கிராம் அளவு சின்ன வெங்காயம், இரண்டு பெரிய தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். உப்பு மற்றும் புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் நான்கு மேஜை கரண்டி அளவு எண்ணெய் காயவைத்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு பாகற்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பாகற்காயை நன்றாக வதக்கினால் தான் கசப்பு சுவை இருக்காது. பாகற்காய் நன்றாக வதங்கி நிறம் மாறிய பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

கிராமத்து முறையில் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப் பயறு குழம்பு!

இறுதியாக ஊற வைத்திருக்கும் உப்பு மற்றும் புளியை கரைத்து ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். மூடி போட்டு மூட வேண்டாம். குழம்பு கொதித்து வற்றி கெட்டியானதும் இறக்கி விடலாம். இறுதியில் விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பாகற்காய் குழம்பு தயார்.

Exit mobile version