வீட்டில் உள்ள பிரஷர் குக்கரில் ஹோட்டல் ஸ்டைல் உதிரி உதிரியான பிரியாணி! ரெசிபி இதோ…

ஹோட்டல்களில் பிரியாணி பிடித்த பலரும் அதே ரெசிபி நம் வீட்டில் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் வீட்டில் உள்ள பிரஷர் குக்கர்களில் பிரியாணி செய்யும் பொழுது சில நேரங்களில் குழைவாகவும் சில நேரங்களில் அடி பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஹோட்டல்களில் சரியான பக்குவத்தில் வெந்து உதிரி உதிரியாக இருக்கும் பிரியாணி அனைவருக்கும் விருப்பம். அதே அளவு சுவையும் மனமும் பக்குவமும் நம் வீட்டில் உள்ள பிரஷர் குக்கரில் சமைப்பதற்கு சில யுக்திகள் உள்ளது. இந்த முறை வீட்டில் பிரஷர் குக்கர் பயன்படுத்தி அருமையான டோட்டல் ஸ்டைல் பிரியாணி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் இரண்டு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அரை மணி நேரம் மூழ்க வைக்க வேண்டும். பாஸ்மதி அரிசி அரை மணி நேரம் மூழ்கினால் சமைப்பதற்கு சரியான பக்குவத்தில் இருக்கும்.

அடுத்து இதற்கு தேவையான 500 கிராம் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை நமது தேவையான அளவு உப்பு கலந்து நன்கு சிக்கனை மசாலாவுடன் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக பிரியாணிக்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கிராம்பு ஐந்து, ஏலக்காய் மூன்று, பட்டை இரண்டு துண்டு, அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி ஒன்று சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். இதில் இரண்டு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய், இரண்டு துண்டு பட்டை, கைப்பிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் நன்கு பொன்னிறமாக மாறியதும் இரண்டு பச்சை மிளகாய் ஒன்று, இரண்டாக இடித்து விழுதுகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் பச்சை வாசனை சென்று உடன் நன்கு பழுத்த மூன்று தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் தேவையான அளவு கல் உப்பு, நாம் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் மசாலா ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு நாம் கழுவி மசாலா தடவி ஊற வைத்திருக்கும் சிக்கனை குக்கரில் சேர்த்து ஒரு சேர கிளற வேண்டும்.

சிக்கன் சேர்த்த பிறகு மசாலாவுடன் நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து பிரியாணிக்கு தேவையான அளவு தண்ணீர் அளந்து ஊற்றிக் கொள்ளலாம்.

காரைக்குடி அரண்மனை விட்டு ஸ்பெஷல் பச்சை மிளகாய் தொக்கு!

இப்பொழுது ஊறவைத்த பாஸ்மதி அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீரிலிருந்து ஒரு கொதி வந்ததும் பாதி எலுமிச்ச பழச்சாறு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.

மிதமான தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் உதிரி உதிரியான பிரியாணி தயார்.

Exit mobile version