கத்திரிக்காய் வைத்து பல ரெசிபிகள் செய்தாலும் சிலர் அதை சாப்பிட பெரிதும் விரும்புவதில்லை. சாதாரணமாக கத்திரிக்காய் வைத்து கடைசல், பொரியல், குழம்பு என வைப்பது வழக்கம். இதைவிட சற்று சிறப்பாக ஹோட்டல்களின் பிரியாணி சாப்பிடும் பொழுது கத்திரிக்காய் ரைத்தா என ஒன்று பரிமாறுவார்கள். கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த ரைத்தாவை மீண்டும் மீண்டும் வாங்கி சாப்பிடுவது சிறப்பு தான். ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி கத்திரிக்காய் கிரேவி நம் வீட்டில் செய்வதற்கான ரகசிய ரெசிபி இதோ…
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை, அரை தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 200 முதல் 300 கிராம் அளவுள்ள கத்திரிக்காய் கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். கத்தரிக்காயை முழுவதுமாக வதக்க வேண்டிய அவசியம் இல்லை பாதி வதங்கினால் போதுமானது.
இப்பொழுது வதங்கிய கத்தரிக்காய் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் மீண்டும் அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கிய பிறகு நாம் எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
எப்போதும் சிவக்க சிவக்க தான் முட்டை சாதமா? வாங்க இந்த முறை பச்சை முட்டை சாதம்! ரெசிபி இதோ…
இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் எலுமிச்சை பல அளவு புளி கரைசல் கெட்டியாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை திரிந்து வரும் வரை மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க வேண்டும்.
அதன் பிறகு நான் முதலில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கலந்து கொள்ளலாம். வேர்க்கடலை மசாலா சேர்த்த பிறகு கொத்தமல்லி இலை, பாதியளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் ரைத்தா தயார்.