குடைமிளகாய் இருக்கா? அப்போ இந்த குடைமிளகாய் பச்சடி இப்படி செய்து பாருங்கள்…!

ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், முட்டை சாதம் என பல்வேறு ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கும் பொழுது அதன் சுவை இன்னும் கூடுதலாக இருப்பதை நாம் உணர்ந்து இருப்போம். இந்த குடைமிளகாய் வைத்தும் தனியாக பல ரெசிபிகளை நாம் செய்ய முடியும் அப்படி ஒரு வித்தியாசமான ரெசிபி தான் குடைமிளகாய் பச்சடி. இந்த குடைமிளகாய் பச்சடி செய்வது சுலபமானது. அதே சமயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சுவையுடனும் இருக்கும். வாருங்கள் இந்த குடைமிளகாய் பச்சடி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

அட.. என்ன சுவை! கிராமத்து ஸ்டைலில் சின்ன வெங்காய காரக்குழம்பு!

குடைமிளகாய் பச்சடி செய்வதற்கு ஒரு குடைமிளகாய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு துவரம் பருப்பு மற்றும் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு ஊறவைத்த வெள்ளை கொண்டைக்கடலை ஆகியவற்றை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு முதலில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கி இருக்கும் தக்காளி மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கி மென்மையாகி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது குழம்பு மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதித்து கெட்டியாக வரும் பொழுது வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் கொண்டக்கடலையை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விட வேண்டும். எல்லாம் சேர்ந்து வற்றிவரும் பொழுது இறக்கி விடலாம். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான வெண்டைக்காய் மண்டி இப்படி செஞ்சு பாருங்க!

அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் பச்சடி தயார்…!

Exit mobile version