ரவை இல்லாத போது கேசரி சாப்பிட ஆசையா? ஒரு கப் அவல் போதும் அட்டகாசமான கேசரி தயார்!

வீட்டில் இருக்கும் பொழுது இனிப்பு சாப்பிட வேண்டும் என தோன்றும் நேரங்களில் சட்டென ஐந்தே நிமிடத்தில் நாம் தயார் செய்யும் ஒரே இனிப்பு வகை கேசரிதான். ஒரு கப் ரவை அரை கப் சர்க்கரை இருந்தால் போதும் ஐந்தே நிமிடத்தில் கேசரி தயார். ஆனால் வீட்டில் ரவை இல்லாத பொழுது கேசரி சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும் நேரங்களில் ரவைக்கு பதிலாக அவல் வைத்து அசத்தலான கேசரி ரெசிபி ஒன்றை செய்யலாம் வாங்க. இந்த கேசரி செய்வதற்கு சர்க்கரையை பயன்படுத்தாமல் வெல்லம் பயன்படுத்தி செய்வதால் மேலும் சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் மாறிவிடும். அவல் கேசரி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த கேசரி செய்வதற்கு நாம் கெட்டியான வெள்ளை அவளை பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, 5 பாதாம் பருப்பு, 10 திராட்சை பழம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கடாயில் மீதம் இருக்கும் அதை நெய்யில் ஒரு கப் அவல் சேர்த்து வதக்க வேண்டும். அவல் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். இப்படி வறுத்த அவலை சிறிது நேரம் ஓரமாக ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடித்து கொள்ள வேண்டும். அவல் ரவை பதத்தில் இருந்தால் போதுமானது இருந்தால் போதுமானது.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு கப் அவலுக்கு இரண்டரை கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து நாம் பொடி செய்து வைத்திருக்கும் அவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவல் சேர்த்த பிறகு கைவிடாமல் தொடர்ந்து ஐந்து நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் நன்கு வற்றி அவல் நன்கு வெந்து வர வேண்டும். இந்த நேரத்தில் ஒரு கப் அவலிற்கு முக்கால் கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

சின்ன வெங்காயம் ஒன்று போதும்… இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத அருமையான தொக்கு ரெசிபி!

இனிப்பு சற்று அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் ஒரு கப் வெல்லம் கூட சேர்த்து கிளறி கொள்ளலாம். இப்பொழுது கேசரி கெட்டிப் பதத்தில் வரும் நேரத்தில் மேலும் இரண்டு தேக்கரண்டி நீ சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இறுதியாக நம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சை இவற்றை கேசரியுடன் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அவல் கேசரி தயார். இந்த கேசரி சாப்பிடுவதற்கு ரவா கேசரியை போல இருந்தாலும் அவல் மற்றும் வெல்லம் சேர்த்து செய்வதால் சுவை சற்று தூக்கலாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். அவல் பிடிக்காத குழந்தைகள் கூட இந்த கேசரியை விரும்பி சாப்பிடுங்கள்.

Exit mobile version