ஸ்வீட்டான சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து காரசாரமான கட்லெட் செய்வதற்கான ரெசிபி இதோ!

நம் உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்து புற்றுநோய் வருவதிலிருந்து பாதுகாக்க சர்க்கரைவள்ளி கிழங்கு மிகவும் உதவுகிறது. இந்த சக்கரவள்ளி கிழங்கை நாம் அப்படியே அவித்து சாப்பிட்டு விடலாம். ஆனால் நம் வீட்டில் உள்ள குழந்தைகள் சில நேரங்களில் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட மறுத்து விடுகின்றனர். அப்படி சாப்பிட மறுக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு இது போன்ற கட்லெட் செய்து கொடுத்துப் பாருங்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து காரசாரமான கட்லெட் செய்வதற்கான ரெசிபி இதோ….

முதலில் நல்ல நடுத்தரமான அளவு சர்க்கரைவள்ளி கிழங்கு இரண்டு அல்லது மூன்று எடுத்துக் கொள்ளலாம். அதன் வெளிப்பகுதியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் சக்கரவள்ளி கிழங்கு ஆவியில் வேக வேண்டும். அதன் பின் அதை சிறிது நேரம் ஆற வைத்து அதன் தோள்களை நீக்கி உள் பகுதியை மாவு போல பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் ஊறவைத்த பச்சை பட்டாணி, ஒரு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் . அரைத்த இந்த விழுதுகளை சீனிக்கிழங்கு மசித்து வைத்திருக்கும் பாத்திரத்துடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கறி மசாலா தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி கான்ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். குறிப்பாக தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ள வேண்டும் .

இப்பொழுது மாவு தயாராக உள்ளது இதை கட்லெட் ஷேப்பிற்கு உருண்டையாக தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சேர்த்து சூடானதும் ஒவ்வொரு கட்லெட் துண்டுகளாக சேர்த்து பொன்னிறமாக இரண்டு பக்கம் வேகும் வரை பொறித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் தயார்.

நம் வீட்டு சமையல் அறையில் ராணியாக மாற இல்லத்தரசிகளுக்கு எளிமையான 10 சமையல் டிப்ஸ்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கை இப்படி கட்லட்டாக மாற்றி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது அதன் சுவையில் மெய்மறந்து நன்கு சாப்பிட்டு விடுவார்கள்.

Exit mobile version