வெண்டைக்காய் வைத்து  எப்பவும் காரக்குழம்பு, சாம்பார் தானா!  நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா!

வெண்டைக்காய் வைத்து காரக் குழம்பு, சாம்பார், துவரம் என வைத்து சலித்து விட்டதா.. சற்று மாறுதலாக நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா ட்ரை பண்ணலாம். வித்தியாசமான சுவையில் இருக்கும் பிந்தி மசாலா சூடான சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் சிறந்த பொருத்தமாக அமையும். பிந்தி மசாலா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – ஒரு கப்
தயிர் – ஒரு கப்
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
மல்லி இலை மற்றும் கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும். அதன் பின் கடலை மாவு, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

இந்த கலவையை மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெண்டைக்காய்களை நன்கு வதக்கிக் கொள்ளவும். பொன்முறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சமையல் கார அண்ணா கை பக்குவத்தில் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பால் பாயாசம்!

குழம்பு நன்கு கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காயை அதில் சேர்த்து இரண்டு மூன்று முறை கிளறிக் கொள்ளவும். இறுதியாக கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகள் தூவி பரிமாறலாம். இந்த கிரேவி சூடான சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிக அருமையாக இருக்கும்.

Exit mobile version