வீட்டில் விசேஷமா? வாங்க சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து பாயாசம் செய்யலாம்!

விசேஷ வீடுகள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பாயாசம் தான். பந்தியில் பரிமாறும் அந்த பாயாசம் தனி சுவையுடன் தித்திப்பாகவும் இருக்கும். உண்பவர்களின் மனதை திருப்திப்படுத்தும் இந்த பாயாசத்தையும் வித்தியாசமான முறையில் சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து ஒருமுறை செய்து பாருங்கள் சுவையில் அனைவரும் அசந்து விடுவார்கள். சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

முதலில் இரண்டு அல்லது மூன்று நல்ல பெரிய சக்கரவள்ளி கிழங்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோள்களை நீக்கிவிட்டு நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கை துருவுவதற்கு கேரட் துருவியை பயன்படுத்தினால் போதுமானது.

துருவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் ஒரு ஐந்து நிமிடங்கள் போட்டு வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து நன்கு பிழிந்து சர்க்கரை வள்ளி கிழங்கு துருவலை மட்டும் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். அகலமான ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் , துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வாசனை வரும் வரை வறுத்த பின் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துருவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீருடன் ஒரு கைப்பிடி அளவு சிறிய ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மீண்டும் கிளறிக்கொடுத்து வேக வைக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூடுதலாக வெந்நீர் ஊற்றிக் கொள்ளலாம். ஜவ்வரிசி, சர்க்கரை வள்ளி கிழங்கு நன்கு வெந்ததும் அரை லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.

பால் சேர்த்தவுடன் இந்த கலவையை குறைந்தது எட்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் பொழுது இரண்டு தேக்கரண்டி மில்க்மெய்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். மில்க் மேட் இல்லாத பட்சத்தில் பாதாம் பால் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.

வகை வகையான பூரி சாப்பிட்டு இருந்தாலும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது கருப்பு உளுந்து பூரியை ட்ரை பண்ண வேண்டும்!

எட்டு நிமிடம் கழித்து அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவை நன்கு சூடு ஆறியதும் ஒரு கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை பாகு சேர்த்து கலந்து கொள்ளலாம். குறிப்பாக இந்த வெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுது சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் பால் திரிந்துவிடும்.

அதனால் நன்கு ஆறிய பின் வெல்லப்பாகு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சர்க்கரை வள்ளி கத்துக்கிட்டே இருக்கியாகிழங்கு பாயாசம் தயார்.

Exit mobile version