மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் சமயங்களில் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக வடை, பஜ்ஜி , பக்கோடா என பலகாரங்களை சாப்பிடுவது வழக்கம். எப்போதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்யும் பொழுது குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று மல்லி கீரையை வைத்து ஒரு பக்கோடா செய்யலாம்..
இந்த பக்கோடா செய்வதற்கு முதலில் ஒரு கட்டு கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், 10 பல் வெள்ளை பூண்டு, ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கடலை மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சேர்ந்து கால் கப் அரிசி மாவையும் நன்கு ஒருமுறை சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மல்லி கீரை, அரைத்த விழுது, இரண்டு பெரிய வெங்காயத்தை நீல நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நம் வீட்டு சமையல் அறையில் ராணியாக மாற இல்லத்தரசிகளுக்கு எளிமையான 10 சமையல் டிப்ஸ்!
இதனுடன் இரண்டு தேக்கரண்டி சூடுபடுத்திய எண்ணை, பக்கோடாவிற்கு தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், இரண்டு தேக்கரண்டி வெண்ணை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
இப்பொழுது மாவு தயாராக உள்ளது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானது நாம் கலந்து வைத்திருக்கும் மாவுக்களை பக்கடா போல சிறு சிறு உருண்டைகளாக தட்டி போடவும். பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுமுறுவென மல்லி கீரை பக்கோடா தயார். இந்த பக்கோடாவை டீ, காபி மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.