சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சீனிக்கிழங்கு உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது. குறிப்பாக இந்த சீனிக்கிழங்கில் விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் சத்து, ஆன்ட்டி ஆஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதை வைத்து ஒரு எளிமையான ஸ்வீட் ரெசிபி செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
சீனிகிழங்கு – அரை கிலோ
நாட்டுச்சர்க்கரை – முக்கால் கப்
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 10 முதல் 15
ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் சீனிக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த சீனிக் கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.
சிக்கன் மஞ்சூரியன் உடன் போட்டி போடும் சுவையில் சைவ கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ…
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முதலில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதே கடாயில் நாம் வசித்து வைத்திருக்கும் சீனிக்கிழங்கு, நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்ததாக நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் சுவையான சீனிக்கிழங்கு அல்வா தயார்.