வாயில் வைத்ததும் நெய் போல கரையும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்காரை… ரெசிபி இதோ!

இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கடையில் வழக்கமாக கிடைக்கும் இனிப்புகளை தவிர்த்து வீட்டிலேயே சில எளிமையான பொருட்களை வைத்து தித்திக்கும் சுவையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க.

செய்ய தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – ஒரு கப்
வெல்லம் – இரண்டு கப்
தண்ணீர் – அரை கப்
நெய் – முக்கால் கப்
ரவை – கால் கப்
துருவிய தேங்காய் – கால் கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – இரண்டு சிட்டிகை
முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு- கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதே நேரம் மற்றொரு கடாயில் இரண்டு கப் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெள்ளம் பாகு காய்ச்சும் பொழுது கம்பி பதம் தேவையில்லை. வெள்ளம் உருகி தண்ணியாக மாறினால் போதும்.

அதன் பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள ரவையை அதில் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். ரவை பொன்னிறமாக வறுபட்டதும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் வரை ரவை மற்றும் தேங்காவை நன்கு வறுக்க வேண்டும். அதன் பின் நாம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை இதில் சேர்த்து கிளற வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் வரை விடாமல் கிளற வேண்டும்.

முதுகெலும்புகளை பலப்படுத்தும் கருப்பட்டி, தேங்காய்ப்பால் உளுந்தங்கஞ்சி! ரெசிபி இதோ!
அப்பொழுதுதான் ரவை நன்கு வந்து பதத்திற்கு வரும். ரவை வெந்தபின் நாம் பாகு காய்ச்சி வைத்திருக்கும் வெள்ளத்தை சேர்த்து கிளற வேண்டும். இந்த நேரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். தண்ணீர் பதத்தில் இருக்கும் இந்த கலவை தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கிளரும் பொழுது அல்வா பதத்திற்கு வந்து விடும். தேவைப்படும் நேரங்களில் சிறிது நெய் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். அடுத்து வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து கிளறும் பொழுது நமக்கு ருசியான ஸ்வீட் தயார். மிக எளிமையான முறையில் 10 நிமிடங்களில் இந்த ஸ்வீட்டை நம் வீட்டில் செய்து முடிக்க முடியும்.

Exit mobile version