வகை வகையான பூரி சாப்பிட்டு இருந்தாலும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது கருப்பு உளுந்து பூரியை ட்ரை பண்ண வேண்டும்!

அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் பூரியும் ஒன்று. இந்த பூரியும் இடத்திற்கு ஏற்றார் போல பல வகைகளில் மாறுபட்ட சுவையுடன், நிறத்துடன், வடிவத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நம் நாட்டு பாரம்பரிய உணவான கருப்பு உளுந்து வைத்து பூரி செய்து சாப்பிடலாம் வாங்க.

இந்த பூரியை செய்வதற்கு முந்தைய நாள் இரவே முழு கருப்பு உளுந்து ஒரு கப் ஊறவைத்து கொள்ள வேண்டும். உடைத்த கருப்பு உளுந்தாக இருந்தால் குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி ஊற வைத்த கருப்பு உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப மூன்று பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி சோம்பு, , அரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கருப்பு உளுந்து கலவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பூரிக்கு மாவு தயாராக உள்ளது.

நம் வீட்டு சமையல் அறையில் ராணியாக மாற இல்லத்தரசிகளுக்கு எளிமையான 10 சமையல் டிப்ஸ்!

இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எப்போதும் போல வட்ட வடிவில் திரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு என்னை ஊற்றி சூடானதும் இந்த பூரி அதில் சேர்த்து இருபுறமும் நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து பூரி தயார்.

இந்த பூமியை உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதை விட ட சிக்கன் அல்லது மட்டன் மசாலா வைத்து சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும்

Exit mobile version