லஞ்ச் பாக்ஸ் தினமும் காலியாக வீட்டிற்கு வர வேண்டுமா? அப்போ ஹெல்த்தியான ராகி ஊத்தாப்பம், காரச் சட்னி ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விதவிதமான லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விட வேண்டும் என்பது நம்ம வீட்டு அம்மாக்களின் கடமையாக இருக்கும். இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். தினமும் புதுவிதமான முறையில் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். இந்த விதத்தில் இருப்பதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்கக்கூடிய ராகி மாவு வைத்து அருமையான ஊத்தாப்பம் அதற்கு சைடிஷ் ஆக கார சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராகி ஊத்தாப்பம் செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கப் ராகி, முக்கால் கப் இட்லி அரிசி அல்லது ரேஷன் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் ராகியை நன்கு கழுவி சுத்தம் செய்து குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஐந்து மணி நேரம் கழித்து அரிசி மற்றும் ராகியை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை குறைந்தது ஆறு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

ஆறு மணி நேரம் கழித்து மாவை மீண்டும் ஒரு முறை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். ஊத்தப்ப கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தி கொள்ளலாம். நன்கு பதமாக புளித்து இருக்கும் ராகி மாவை கல்லில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்மேல் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லி இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் லேசாக இட்லி பொடி தூவி நன்கு பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.

குறைந்தது மூன்றில் இருந்து நான்கு நிமிடம் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ராகி ஊத்தாப்பம் தயார். இதற்கு சைட் டிஷ் ஆக மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க.

முதலில் நம் காலத்திற்கு தகுந்த மாதிரி பத்து முதல் 15 காய்ந்த வத்தலை எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் இந்த வத்தலை சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் 10 பல் வெள்ளை பூண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு புளி, 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்த காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் தேவைப்பட்டால் காய்ந்த வத்தல் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒன்று சாப்பிட்டால் 10 சாப்பிட தோன்றும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பூரண கொழுக்கட்டை ரெசிபி!

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தலித்துக் கொள்ள வேண்டும். நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் சட்னியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் மூன்று நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

சட்னியில் இருந்து பச்சை வாசனை சென்றவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது மிருதுவாக இருக்கும் ராகி ஊத்தாப்பத்துடன் நல்ல காரசாரமாக இருக்கும் மிளகாய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இதை லஞ்ச் பாக்ஸ் இருக்க கொடுக்கும் விடலாம்.

Exit mobile version