மூட்டு வலி, மலச்சிக்கல் பிரச்சனையா? அப்போ வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் தோசை சாப்பிடுங்க!

முடக்கத்தான் கீரையில் சற்று கசப்பு தன்மையாக இருப்பதால் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்தக் கீரையில் விட்டமின்களும், தாது உப்புகளும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த கீரையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மூட்டு வலி, மலச்சிக்கல், மூல நோய், வாய்வுத் தொல்லை என பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இந்த முடக்கத்தான் கீரையை சற்று மாறுதலாக தோசை செய்து சாப்பிடலாம் வாங்க.

செய்ய தேவையான பொருட்கள்

தோசை மாவு – இரண்டு கப்
முடக்கத்தான் கீரை – இரண்டு கப்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
வெள்ளை பூண்டு – 10 முதல் 15
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் உறித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அந்த நேரத்தில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு வதங்கி வாசனை வரும் நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரை நன்கு எண்ணெயில் வதங்க வேண்டும். பச்சை வாசனை செல்லும் வரை கீரையை வதக்கிக் கொண்டால் தோசை சுவையாக இருக்கும். கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விடலாம். இப்போது வதக்கி வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்யாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

 பத்தே நிமிடத்தில் சட்டென செய்து முடிக்கும் ஈவினிங் ஸ்நாக்ஸ்!  முட்டை பணியார ரெசிபி இதோ!

அந்த கலவையை நாம் தோசை மாவில் கலந்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இப்பொழுது முடக்கத்தான் கீரை தோசை மாவு தயார். இந்த மாவு வைத்து இட்லி அல்லது தோசை செய்து கொள்ளலாம். தோசை செய்யும் பொழுது நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் தோசை சற்று வாசனையாக இருக்கும் . முடக்கத்தான் கீரையை தோசையாக செய்து சாப்பிடும் பொழுது அதன் கசப்புத்தன்மை தெரியாது சாப்பிடுவதற்கு சுவையாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கும்.

Exit mobile version