மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் கோவில் பிரசாத தேங்காய் சாதம்! அருமையான ரெசிபி இதோ..

பொதுவாக கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் அளவு குறைவாக இருந்தாலும் சுவையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதத்தில் அந்த பிரசாதம் அமைந்திருக்கும். இப்படி கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த தேங்காய் சாதத்தை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்விக்கலாம் வாங்க.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இந்த சாதம் தேங்காய் எண்ணெயில் செய்யும் பொழுது சுவையும் மனமும் வாசனையாக இருக்கும்.

கடலைப்பருப்பு நிறம் மாறும் பொழுது பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, மூன்று முதல் நான்கு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும். இதில் பத்து முதல் 15 அளவு முந்திரிப்பருப்பு, கைப்பிடி அளவு திராட்சை சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும்.

இப்பொழுது இரண்டு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் சேர்ந்து பொன்னிறமாக நிறம் வாரும் வரை வறுத்துக்கொள்ளவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் சமைத்து ஆற வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கிளற வேண்டும்.

காலை உணவை ஹெல்தியாக மாற்ற… ஓட்ஸ் வைத்து சுவையான இட்லி செய்வதற்கான ரெசிபி!

தேங்காய் சாதம் செய்வதற்கு சாதம் தயார் செய்யும் பொழுது முக்கால் பாகம் வேகவைத்து நன்கு வடித்து ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சாதத்தை தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் சேர்த்து கிளறும் பொழுது சுவை அருமையாக உதிரி உதிரியாக இருக்கும். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

இப்பொழுது கோயில்களில் பிரசாதமாக வழங்கும் அதே சுவையில் தேங்காய் சாதம் தயார்.

Exit mobile version