மதுரை ஸ்பெஷல் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு! ரெசிபி இதோ!

நாட்டுக்கோழி குழம்பு என்பது அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று. பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகளில் அதிகப்படியான சத்து உள்ளது. நெஞ்சு சளி மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும் இந்த நாட்டுக்கோழி வைத்து மதுரை ஸ்பெஷல் வறுத்தரைத்த நாட்டுக்கோழி குழம்பு செய்து சாப்பிடலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி – 250 கிராம்
தேங்காய் – ஒரு கப்
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
கடல் பாசி – சிறிதளவு
மல்லி – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
வத்தல் – 10
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 1
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
மிளகு சீரகப்பொடி – 1 தேக்கரண்டி


செய்முறை


முதலில் ஒரு கடாயில் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் மல்லி, வத்தல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கடற்பாசி, பிரியாணி இலை, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

டக்கு டக்குனு 5 நிமிடத்தில் டேஸ்டான முட்டை மசாலா தயார்! ரெசிபி இதோ!

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளலாம். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை அதில் சேர்த்து பச்சை வாசனை செல்லும்வரை வறுத்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை அதில் சேர்த்து கலந்து கொள்ளலாம். கோழி வேகும் அளவிற்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு தயார். இறுதியாக கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை தூவி சாப்பிட பரிமாறலாம்.

Exit mobile version