அசைவ பிரியர்களுக்கு வாரம் முழுக்க அசைவம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி எல்லாம் நாட்களும் அசைவம் சாப்பிட முடியாது. அந்த மாதிரி நேரங்களில் அசைவ மட்டன் சுக்கா சுவையில் சைவ மஸ்ரூம் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். மட்டனை மிஞ்சும் மஸ்ரூம் சுக்கா சுவையில் நாக்கு மெய் மறந்து விடும். இந்த சுக்காவை சூடான சாதம் அல்லது சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும். இந்த சுக்கா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் 2 லவங்கம், ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், நான்கு காய்ந்த வத்தல் சேர்த்து முதலில் தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், அந்த வெங்காயம் வதங்கும் நேரத்தில் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த தக்காளி ஒன்றை கொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கைப்பிடி அளவு கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை தொடர்ந்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் 400 கிராம் மற்றும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஸ்ரூம் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இரண்டு மூன்றாக நறுக்கியும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இந்த கலவையை நன்கு கடாயில் கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பந்தியில் பரிமாறப்படும் இன்ஸ்டன்டான பச்சை மாங்காய் ஊறுகாய்! ரெசிபி இதோ…
பத்து நிமிடங்கள் மிதமான தீயில் மஸ்ரூமை கொதிக்க விடவும். அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் , அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். மறுத்த இந்த பொருட்கள் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து மஷ்ரூம் வெந்ததும் நாம் அடைத்து வைத்திருக்கும் பொடி, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி தலைகள் தூவி இறக்கினால் மற்றும் சுக்கா தயார். சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.