மட்டன், சிக்கன் இல்லாம உப்புக் கறி சாப்பிட ஆசையா! ஐந்தே நிமிடத்தில் காளான் உப்புக்கறி!

காளானில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காளானை தினமும் சூப் செய்து சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட முடியும். மேலும் மலட்டுத்தன்மை, கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு காளான் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இந்த காளான் வைத்து பிரியாணி, கிரேவி, தொக்கு என பல ரெசிபிகள் செய்தாலும் புதுமையாக காளான் உப்புக் கறி செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

காளான் – 2 கப்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
காய்ந்த வத்தல் – 5
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றை தேக்கரண்டி
கருவேப்பிலை – கையளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன்பின் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலைகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் வத்தல் சேர்த்து வதக்க வேண்டும். வத்தல் சேர்க்கும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் வத்தல் கரியாமல் இருக்கும்.

அதன் பின் மிதமான தீயில் அடுப்பை வைத்து அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை செல்லும்வரை வதக்கினால் போதுமானது. அதன் பின் நாம் கழுவி நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை இதில் சேர்த்துக் கொள்ளலாம். காளானை நீள நீளமாக நறுக்க வேண்டும்.

கோவக்காய் இனி கசக்கவே கசக்காது! கோவக்காய் வைத்து பருப்பு கூட்டு ரெசிபி இதோ!

காலானை எண்ணெயுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீரை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இந்த கலவையை நன்கு கிளரி கொடுத்து பத்து முதல் 15 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் இப்பொழுது நமக்கு காளான் உப்புக்கறி தயார். தேவைப்பட்டால் வாசனைக்காக மல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.

Exit mobile version