பேமஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் பட்டர் தந்தூரி சிக்கன்! அசத்தலான ரெசிபி இதோ…

சிக்கன் வைத்து பல வகையான உணவு வகைகள் நம் வீட்டிலேயே செய்ய முடிந்தாலும் சிலவகையான உணவு வகைகள் மட்டும் ரெஸ்டாரண்டுகளில் பிரபலமாக இருக்கும். அப்படி பிரமாண்ட ரெஸ்டாரண்டுகளில் பிரபலமான ஒன்றுதான் சிக்கன் பட்டர் தந்தூரி. இனி இந்த ரெசிபியை ஹோட்டலில் சென்று தான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே எளிமையாக செய்து முடிக்கலாம். அதற்கான அசத்தலான ரெசிபி இதோ…

நன்கு கழுவி சுத்தம் செய்த ஒரு அரை கிலோ சிக்கனை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி சாட் மசாலா, ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் ஸ்பெஷல் ஆக ஒரு தேக்கரண்டி எல்லோ சில்லி தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மசாலா இல்லாத பட்சத்தில் காஷ்மீரின் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து கொடுத்து இதனுடன் கெட்டியான ஒரு கப் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மசாலா கலந்து இந்த சிக்கனை 15 நிமிடங்கள் ஓரமாக வைத்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி பட்டர் சேர்த்து உருகியதும் கலந்து வைத்திருக்கும் மசாலா சிக்கனை அதில் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

15 நிமிடத்தில் டேஸ்டான அரிசி பருப்பு சாதம்! எளிமையான ரெசிபி இதோ!

15 நிமிடங்களில் சிக்கன் நன்கு வெந்து விடும். அதன் பின் வெந்த சிக்கன்களை ஒரு கம்பியில் அடுத்தடுத்து சொருகி எரியும் நெருப்பில் பாட்டினால் சிக்கன் தந்தூரி தற்பொழுது தயார்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு கப் கொத்தமல்லி மற்றும் புதினா, இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு கப் தயிர், அரை தேக்கரண்டி சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக இந்த கலவியுடன் தேவையான அளவு பிரெஷ் கிரீம் கலந்து கொண்டால் கிரீன் தயாராக உள்ளது.

இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் சிக்கன் தந்தூரியில் இந்த கிரீம் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்தால் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் தந்தூரி சிக்கன் தயார்.

Exit mobile version