விசேஷ நாட்களில் நம் வீட்டிலேயே இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். அதிலும் இப்போதைய நாட்களில் ஹோம் மேட் கேக் என்பது பிரபலமாக உள்ளது. நம் குழந்தைகள் விரும்பும் படி கேக் செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். நம் வீட்டிலேயே பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் என எதுவும் இல்லாமல் எளிமையான மூன்று பொருள் வைத்து அருமையான கேக் செய்யலாம் வாங்க…
ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 100 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். முட்டையுடன் நாட்டு சக்கரை நன்கு கலக்கும் அளவிற்கு தொடர்ந்து கலந்து கொடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் தேவைப்பட்டால் வெண்ணிலா எசன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். முட்டையுடன் நாட்டு சக்கரை நன்கு சேர்ந்து வெள்ளை நிற மாவாக பஞ்சு போல் வர வேண்டும். அந்த அளவிற்கு இந்த கலவையை நாம் தொடர்ந்து பீட் செய்து கொள்ள வேண்டும்.
பஞ்சு போல மாவு வெள்ளையாக உப்பலாக வந்தவுடன் 100 கிராம் மைதா சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். மைதா சேர்த்தவுடன் நன்கு கைவிடாமல் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கலக்க வேண்டும். இப்பொழுது இந்த மாவை கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். கேக் தயாரிக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில் பட்டர்ஷீட் சேர்த்து இந்த மாவை மேலே ஊற்றிக் கொள்ளலாம்.
இந்த கேக்கை 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் ஓவனில் வேகவைத்து எடுக்க வேண்டும். நாம் குக்கரில் சமைப்பதாக இருந்தால் குக்கரின் அடிப்பகுதியில் ஒரு பாத்திரம் வைத்து விட்டு மேலே கேக் கலவை ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் குறைந்தது 70 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!
இப்பொழுது நமக்கு சுவையான கேக் தயார். இந்த கேக் தயாரிப்பதற்கு சமையல் சோடா, பேக்கிங் சோடா, ஆயில் என எதுவும் சேர்க்காமல் கேக் மிருதுவாகவும் திகட்டாத சுவையிலும் இருக்கும். வீட்டில் உள்ள முட்டை, மைதா, நாட்டு சக்கரை என எளிமையான பொருட்களை வைத்து இந்த கேக் தயாரித்திருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடலாம்.