புளி சேர்க்காமல் 15 நிமிடத்தில் தயாராகும் மொச்சைப் பயிறு குழம்பு!

நாம் அதிகமாக பயன்படுத்தாத பயிறு வகைகளில் மொச்சை பயிரும் ஒன்று. ஆனால் இந்த மொச்சை பயிரில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. முதல் பெரியவர்கள் வரை இந்த மொச்சை பயிறு சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த மொச்சை பயிறு வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

மொச்சை பயிறு – ஒரு கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
தேங்காய் – ஒரு கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 4
இஞ்சி – சிறு துண்டு
வெள்ளைப்பூண்டு – 5 பல்
குழம்பு மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் தாளிப்பிற்காக கடுகு சேர்த்துக் கொள்ளலாம். கடுகு நன்கு பொறிந்ததும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளிகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கும் பொழுது பச்சையாக உள்ள மொச்சை பயிர்களை சேர்த்து வதக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் தேங்காய், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு சேர்த்து மையாக அரைக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.மொச்சைப் பயிறு எண்ணெயுடன் சேர்த்து நன்கு வழங்கியதும் அதில் குழம்பு மசாலா தூளை சேர்க்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரையில் எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.

கோவக்காய் இனி கசக்கவே கசக்காது! கோவக்காய் வைத்து பருப்பு கூட்டு ரெசிபி இதோ!

அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். சுவைக்கு ஏற்ப மீண்டும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குக்கரில் மூன்று முதல் நான்கு விசில் வரை வேக விட்டு எடுக்க வேண்டும்.

இப்பொழுது நமக்கு சுவையான மொச்சை பயிரில் குழம்பு தயார். இந்த மொச்சை பயிறு குழம்பு சாப்பிடுவதற்கு மிக சுவையானது மட்டுமல்லாமல் சமைக்கவும் மிக எளிமையானது. தேவைப்பட்டால் பரிமாறுவதற்கு முன் வாசனைக்காக மல்லி இலைகளை தூவிக்கொள்ளலாம்.

Exit mobile version