பாகற்காயில் அசத்தலான சுவையான முட்டை பொடி மாஸ்! ரெசிபி இதோ!

பாகற்காயின் கசப்பு தன்மையின் காரணமாக பலர் இதை விரும்புவதில்லை.. ஆனால் பாகற்காயை வாரத்தில் இருமுறை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது பல வியாதிகளுக்கு முற்றுப்புள்ளி ஆக அமைகிறது. அந்த வகையில் பாவக்காய் வேண்டாம் என ஒதுக்கும் நபர்கள் கூட இந்த பாவக்காய் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

பாகற்காய் – ஒரு கப்
வெங்காயம்- 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
கரம் மசாலா- அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
முட்டை – 3
மிளகு சீரக பொடி – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை- கைப்பிடி அளவு
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் மற்றும் உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதில் தாளிப்பிற்காக பெருஞ்சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதுகள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது மல்லித்தூள், மிளகாய்த்தூள், கறி மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும். இதில் நாம் நறுக்கி கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் பாவக்காய்களை சேர்த்து வதக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் பாவக்காய் எண்ணெயில் நன்கு வதங்க வேண்டும். பாகற்காய்களை பொடி பொடியாக நறுக்க வேண்டும் அப்பொழுதுதான் எண்ணையில் நன்கு வதங்கும். இந்த நேரத்தில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பாகற்காய்களை நன்கு கலந்து கொடுத்து ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

உடலில் உள்ள பித்தத்தை உடனே குறைக்க… நார்த்தம் பழம் சாதம்!
அதன் பின் பாவக்காய் வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுத்து இறுதியாக மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். முட்டைகளை நன்கு கிளரும் பொழுது தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக வாசனைக்காக மல்லி தலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமக்கு சுவையான பாவக்காய் முட்டை பொடிமாஸ் தயார்.

Exit mobile version