குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவது வல்லாரைக்கீரை. இந்தக் கீரையை வாரத்தில் இரு முறை நம் குழந்தைகளுக்கு கொடுத்து வரும் பொழுது மூளைக்கு சுறுசுறுப்பை தூண்டி ஞாபக சக்தி அதிகரித்து, புத்தி கூர்மை ஏற்படும். இந்த வல்லாரை வைத்து காரப்பொடி செய்வதற்கான ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை – கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கப்
கடலைப்பருப்பு – இரண்டு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 6
வெள்ளை பூண்டு – 10
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கருப்பு எள் அல்லது வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் இந்த வல்லாரை பொடி செய்வதற்கு முன்பாக வல்லாரைக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி வெயில் படாத விதத்தில் நிழலில் காய வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த வத்தல், வெள்ளைப்பூண்டு, சிறிதளவு உப்பு சேர்ந்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக மிளகு, சீரகம், எள் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக வல்லாரை, கறிவேப்பிலையை நன்கு வதக்க வேண்டும்.
இரண்டு தக்காளி, ஒரு கப் ரவை போதும்… இட்லி மாவு இல்லாமல் முறுமுறு தோசை!
வதக்கிய இந்த பொருன்களை சில நிமிடம் ஆற வைக்கவும். அதன் பின் மிக்சி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ளவும். இந்த வல்லாரை பொடியை இட்லி, தோசை,சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொது சுவை அருமையாக இருக்கும்.