பச்சரிசி இல்லாமல் ரவை வைத்து சூப்பரான வெண்பொங்கல் செய்யலாம்! தரமான ரெசிபி இதோ!

பச்சரிசி இல்லாமல் ரவை வைத்து சூப்பரான வெண்பொங்கல் செய்யலாம்! தரமான ரெசிபி இதோ!

பொதுவாக வெண்பொங்கல் என்றாலே பச்சரிசி வைத்து செய்வதுதான் வழக்கம். பச்சரிசி இல்லாத சமயங்களில் சற்று மாறுதலாக ரவை வைத்து சூப்பரான வெண்பொங்கல் செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப்
பாசிப் பருப்பு- அரை கப்
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி – சிறிய துண்டு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை

ஒரு குக்கரில் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை கப் பாசிப்பருப்புக்கு ஒரு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே நேரம் மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து ரவையை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு நன்கு வெந்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் விழாத அளவு கிளறி கொள்ளவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 கல்யாண வீட்டு ஸ்பெஷல் தித்திக்கும் வெங்காய ஊறுகாய்!  ரகசிய ரெசிபி இதோ!

ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம் , முந்திரிப் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இறுதியாக வாசனைக்காக கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த தாளிப்பை பொங்கலுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது சுவையான ரவை பொங்கல் தயார்.

Exit mobile version