நூடுல்ஸ் இன் அதே சுவையில் சேமியா வைத்து கிச்சடி செய்யலாம் வாங்க!

மைதா கலந்த நூடுல்ஸ்யை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க பெரும்பாலும் விரும்புவது இல்லை. ஆனால் குழந்தைகள் நூடுல்ஸ் வேண்டும் என அடம் பிடிக்கும் நேரங்களில் அதற்கு பதிலாக நூடுல்ஸ்ஸின் அதே சுவையில் சேமியா வைத்து கிச்சடி செய்த்து கொடுத்து பாருங்கள். இந்த சுவையில் குழந்தைகள் மெய் மறந்து விடுவார்கள்.

இந்த கிச்சடி செய்வதற்கு இரண்டு கப் சேமியாவை ஒரு கடாயில் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். சேமியா குறிப்பாக பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதனை நன்கு வறுத்து ஒரு ஓரமாக வைத்து விடவும்.அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். அதன் பின் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு இவற்றை எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இந்த சேமியா கிச்சடிக்கு உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.

காய்கறிகள் பாதி அளவு வேகும் நேரத்தில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கறிமசாலாத்தூள், கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும். ஒரு கப் சேமியாவிற்கு ஒன்றரை கப் தண்ணீர் இன்று வீதத்தில் தற்பொழுது மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஹெல்த்தியான சட்னி சாப்பிட வேண்டுமா? வாங்க முருங்கைக்கீரை சட்னி ட்ரை பண்ணலாம்!

மேலும் காய்கறிகள் நன்கு வேக வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் நன்கு வெந்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இறுதியாக மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான நூடுல்ஸ் போன்ற சேமியா கிச்சடி தயார்.

Exit mobile version