இட்லி மற்றும் தோசைக்கு சைடிஷ் ஆக தேங்காய் சட்னி வைப்பது வழக்கம். தேங்காய் சட்னி சுவைக்காக மட்டுமல்லாமல் அதிகப்படியான சத்துக்களையும் தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. சில நேரங்களில் தேங்காய் இல்லாத பொழுது அதே சுவையில் மற்றொரு சட்னி செய்து அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 2
பொரிகடலை – இரண்டு தேக்கரண்டி
புலி – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5
கடுகு – ஒரு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் -2
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை, கண்ணாடி பதத்தில் வழங்கினால் போதுமானது.
வதக்கி எந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் பொரிகடலை, வெள்ளை பூண்டு, இஞ்சி, சிறிதளவு புலி சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொறிந்ததும் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக இரண்டு காய்ந்த வத்தலை சேர்த்துக் கொள்ளவும். இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சளித்து விட்டதா.. அப்போ பச்சை பட்டாணி சட்னி வைத்துப் பாருங்கள்!
சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொண்டால் இப்பொழுது தேங்காய் இல்லாத தேங்காய் சட்னி தயார். இட்லி மற்றும் தோசைக்கு அருமையாக இந்த மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி சிறப்பாக இருக்கும்.