திருப்பதி என்றாலே லட்டுக்கு மட்டுமில்லை.. தேவஸ்தான புளியோதரையும் ஸ்பெஷல் தான்! வாங்க ட்ரை பண்ணலாம்!

திருப்பதி என்று நினைக்கும் பொழுது நம் மனதில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி தேவஸ்தான லட்டு அவ்வளவு சுவையாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. ஆனால் திருப்பதியில் லட்டுக்கு இணையாக தேவஸ்தான புளியோதரையும் ஸ்பெஷல் தான். இந்த புளியோதரையை நாம் வாழ்நாளில் ஒரு முறையாவது சுவைக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தான புளியோதரை ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 4
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
முந்திரி பருப்பு – 10
புளி – பெரிய எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி – அரை தேக்கரண்டி
வெள்ளம் – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். அதில் வெந்தயம், மிளகு, சீரகம் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடியாக மாற்றிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிப்பிற்காக கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை சேர்த்துக் கொள்ளவும், அதன் பின் கருவேப்பிலை மற்றும் காய்ந்த வத்தல்களை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு முந்திரிகளை சேர்த்து இதனுடன் வதக்க வேண்டும். அதன் பின் நாம் ஊற வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து தண்ணீர் மற்றும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்ன மாற்றத்தில் சமையல் அறையின் ராணியாக மாறலாம்…சமையல் டிப்ஸ் இதோ!

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடியை இதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது இதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் ஒரு சிறிதளவு வெல்லத்துண்டு சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் பொழுது நமக்கு புளியோதரை தொக்கு தயாராக மாறி உள்ளது.

இந்த புளியோதரை தொக்கை சாதத்தில் சேர்த்து கிளறி அப்படியே சாப்பிட்டு விடாமல் ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version