தனி சுவையில் குழந்தைகளை அடிமையாக்கும் குஜராத் ஸ்டைல் பார்சி பூரி!

பூரி அப்படின்னு சொன்னாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். எவ்வளவோ விதவிதமான பூரிகள் இருந்தாலும் பூரியின் மீது உள்ள ஆர்வம் குழந்தைகளுக்கு என்றும் குறைவதில்லை. அந்த வகையில் விடுமுறை நாட்களில் குழந்தைகளை திருப்தி படுத்த குஜராத் ஸ்பெஷல் பார்சி பூரி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த பார்சி பூரி செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி ஓமம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ளவும்.

அதனுடன் ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிலிம்ஸ், சிறிதளவு கஸ்தூரி மேத்தி, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது மாவு கலந்து கொள்வதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு நன்கு விரவி எடுத்துக் கொள்ளவும்.

பூரி மாவு பதத்திற்கு கடந்த மாவை ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிடலாம். அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டிக் கொள்ளவும். வட்டமாக தட்டிய பூரி மாவை நீளமாக சுருட்டி மீண்டும் உருண்டைகளாக மாற்றிக் கொள்ளவும். மாவை இந்த வடிவத்தில் திரட்டும் பொழுது தேவைப்பட்டால் அரிசி மாவு தூவி கொள்ளலாம்.

வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கும் அப்பளம் குழம்பு!

இப்பொழுது உருண்டையாக திரட்டிய மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து மீண்டும் ஒரு முறை வட்ட வடிவில் மாற்றி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். பொதுவாக கோதுமை மாவு பூரி போல இந்த பூரி உப்பலாக வராது. எண்ணையின் அடிப்பாகத்திலேயே இருக்கும். பூரி பொன் நிறமாக ஒருபுறம் வந்ததும் மறுபுறம் மாற்றிப் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

இறுதியாக சுவையான குஜராத் ஸ்டைல் பார்சி பூரி தயார். இந்த பூரி சாப்பிடுவதற்கு கிழங்கு மசாலா, வெஜ் குருமா என தனியாக ஒன்று செய்ய வேண்டிய அவசியம் இல்லை அப்படியே சாப்பிட்டு விடலாம்.

Exit mobile version