மாலை நேரங்களில் பள்ளி முடித்து வரும் குழந்தைகள் முதல் கல்லூரி முடித்துவரும் இளைஞர்கள் வேலையை முடித்து வரும் பெரியவர்கள் என அனைவரும் புத்துணர்ச்சிக்காக முதலில் விரும்புவது டீ , காபி மட்டும் தான். ஆனால் இந்த டீ, காபி வழக்கத்தை விட மிகவும் சத்து நிறைந்தது சூப் வகைகள். இந்த சூப் வகைகளை நம் மிக எளிமையான முறையில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து மாலை நேர உணவு பழக்கத்தை சத்தானதாக மாற்றலாம். வீட்டில் உள்ள வாழைத்தண்டு மற்றும் காளான் வைத்து பத்தே நிமிடத்தில் சூப் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – ஒரு கப்
காளான் – ஒரு கப்
இஞ்சி – ஒரு துண்டு
வெள்ளைப்பூண்டு – 4
பச்சை மிளகாய் -1
வெங்காயம் – 10 முதல் 15
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
மிளகு சீரகப்பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – கைப்பிடி அளவு
கான்பிளார் மாவு – ஒரு தேக்கரண்டி
மல்லி பொடி, சீரகப்பொடி, கரம் மசாலா பொடி- அரை தேக்கரண்டி
செய்முறை
ஒரு சின்ன உரலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றி அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை அதில் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கியதும் அதில் நம் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் காளான் மற்றும் வாழத்தண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
அம்மா கை பக்குவத்தில் வீடே மணமணக்கும் கோவில் புளியோதரை ரெசிபி இதோ!
மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் அதை வதக்கினால் போதுமானது. அதன் பின் மல்லி பொடி, சீரகப்பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்க வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது சூப்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
ஐந்து நிமிடம் கொதித்த பின் கான்பிளார் மாவு கரைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சூப் கெட்டியாக இருக்கும். இறுதியாக இதில் மிளகு சீரகத்தூள், மல்லித்தலைகளை தூவினால் சூப் வாசனையாக இருக்கும். இப்பொழுது காளான், வாழைத்தண்டு சூப் தயார்.