டீக்கடை ஸ்டைல் காரசாரமான கடலை பருப்பு பக்கோடா! ரெசிபி இதோ…

டீக்கடைகளில் விற்கப்படும் பக்கோடா தனி சுவைதான். சூடாக ஒரு டீ அல்லது காபி குடித்துக் கொண்டே அந்த பக்கோடாவை சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். நம் வீடுகளில் மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் பொழுது அதே பக்கோடாவை நம் வீட்டில் செய்து சுவைக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – ஒரு கப்
காய்ந்த வத்தல் – 3
சோம்பு – அரை தேக்கரண்டி
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் -2
வெங்காயம் – 2
மல்லி இலை மற்றும் கருவேப்பிலை – கைப்பிடி அளவு
பெருங்காயத்தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த வத்தல், சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைப்போல் மாவை மையாகவும் அரைக்க வேண்டாம். பரபரவென அரைத்தால் போதுமானது.

அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, , மஞ்சள் தூள், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

சமையல் கார அண்ணா கை பக்குவத்தில் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பால் பாயாசம்!

வாசனைக்காக பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலந்த இந்த மாவை ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் பொடி பொடி உருண்டைகளாக மாற்றி பொறித்தெடுக்கவும். இப்பொழுது டீக்கடை ஸ்டைலில் கடலைப்பருப்பு பக்கோடா தயார்.

Exit mobile version