டப்பு டப்புன்னு பத்தே நிமிடத்தில் தயாராகும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் மிக எளிமையான மற்றும் சுவையான லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விட ஆசையா? அப்போ இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணுங்க. சுவையான கொத்தமல்லி சாதம் ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள்

சாதம் – ஒரு கப்
கடலைப்பருப்பு- இரண்டு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மல்லி இலை – இரண்டு கப்
புதினா இலை – கைப்பிடி அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
புளி – எலுமிச்சை பழ அளவு
நெய் – ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 10
தேங்காய் – அரை கப்
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதன் பின் நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். மல்லி இலைகள் வதங்கியதும் எலுமிச்சை பழ அளவு புளி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின் இறுதியாக கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வதக்கி இந்த பொருட்களை ஒரு ஓரமாக ஆற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – உடுப்பி ஸ்டைல் டேஸ்ட்டான மஸ்ரூம் புலாவ்!

அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளிப்பிற்காக சேர்த்துக் கொள்ளவும். இரண்டும் நன்கு பொரிந்ததும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக முந்திரிப் பருப்புகளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மல்லி விழுதுகளை சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் தேவை மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது மல்லி சாதம் செய்வதற்கு தொக்கு தயாராக உள்ளது. நம் வீட்டில் நன்கு ஆற வைத்த சாதத்தில் இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறினால் நமக்கு சுவையான புதினா சாதம் தயார். இப்பொழுது தேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம் சாதம் மேலும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Exit mobile version