டக்கு டக்குனு 5 நிமிடத்தில் டேஸ்டான முட்டை மசாலா தயார்! ரெசிபி இதோ!

நம் உடலுக்கு உடனடியாக ஊட்டச்சத்துக்களை தரும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது முட்டை. இந்த முட்டையை வேகவைத்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து உடனடியாக கிடைத்து விடுகிறது. இத்தனை சிறப்பு மிக்க முட்டையை வைத்து சுலபமான மற்றும் டேஸ்ட்டான ஒரு முட்டை மசாலா செய்து சாப்பிடலாம் வாங்க.

செய்ய தேவையான பொருட்கள்

பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
வேக வைத்த முட்டை – 5
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
மசாலா பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மல்லி இலை – கைப்பிடி அளவு
எலுமிச்சை பழம் – பாதி அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் , சீரகம், மிளகு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ளவும்.

அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நாம் வேகவைத்து பாதியாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையை அந்த மசாலாவில் சேர்க்க வேண்டும். முட்டையில் முழுவதுமாக மசாலா படும் அளவிற்கு கலந்து கொடுத்து எண்ணெயில் வேக வைக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் முட்டையை பொறித்தால் போதுமானது.

மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தாளிப்பிற்காக சீரகம் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.

பாட்டியின் அதே கைப்பக்குவத்தில்  எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு  சாப்பிடனுமா?   இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

அதன்பின் சிறிதளவு மஞ்சள் தூள் கறி மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் மசாலாவில் பொரித்து வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் பொடியாக மாற்றி வைத்திருக்கும் பெருஞ்சீரக பொடியையும் இதில் சேர்த்து கிளறி வேண்டும். இந்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் சன் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். மசாலா கெட்டியாக மாறியதும் முட்டை தொக்கு தயார். இறுதியாக மல்லி இலைகள் தூவி பாதி அளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கிளறினால் சுவையான முட்டை தொக்கு சாப்பிட தயாராக மாறியது.

Exit mobile version